குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிபிடித்த நிலைக்கு ஆளானார்; விசாரணை ஒத்திவைப்பு

20 வயதான ஒரு பெண்மணி திடீரென்று வெறிபிடித்த நிலைக்கு ஆளானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான வழக்கு இங்குள்ள கோலபிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது என்று கோல பிலா வட்டார போலீஸ் தலைவர் சூப்ரிண்டன் அம்ரான் முகமட் கனி கூறினார்.
பொய்ப் புகார் செய்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 182இன் கீழ் சம்பந்தப்பட்ட பெண் மணியின் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மணி, தம்போய் ஜொகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
எனினும் குற்றஞ்சாட்டப் பட்டவர் மீது குற்றப் பத்திரிகை வாசித்து முடிக்கப்படுவதற்கு முன்னரே அவர் வெறிபிடித்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.
எனினும் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த குற்றஞ்சாட்டப்பட்டவர், சிகிச்சைக்காக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =