குற்றச்செயல்கள் புரிவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்

0

தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குறிப்பாக இந்திய இளைஞர்கள் குற்றச்செயல் கள் புரிவதைத் தவிர்க்க வேண்டும் என சிலாங்கூர் குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் வலியுறுத்தினார்.
இந்திய இளைஞர்கள் குற்றச்
செயல்களில் ஈடுபடு வதால், அவர்களின் எதிர்காலம்
சூன்ய மாவதோடு அவர்களின்
குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாவ தாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி கோலசிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள ராஜமூடா மூசா இடைநிலைப்பள்ளி சமூக மண்டபத்தில் மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு மாநில முன்னாள் காவல்படையின் தலைவருமான அவர் இவ்வாறு பேசினார்.
இளைஞர்கள் குற்றச்செயல் களில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களை இளை
ஞர்கள் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய, மலாய், சீன சமூகங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here