குறைவான விலையில் வேள்பாரி நிலம் வாங்கினாரா?

செனட்டர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி சந்தை விலைக்கும் குறைவான விலையில் இரு நிலங்களை வாங்கிய விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று மஇகாவின் முன்னாள் தொகுதித் தலைவர் ஒருவர் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம் (கேபிஜே), தேசிய நிலநிதிக் கூட்டுறவுக் கழகம் (என்எல்எஃப்சி) ஆகியவற்றிலிருந்து வேள்பாரி மற்றும் அவரின் குடும்ப நிறுவனத்தின் சார்பில் நிலங்களை வாங்கியிருப்பதாக சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவர் எம்.லோகநாதன் குறிப்பிட்டார்.
சுங்கை சிப்புட்டில் மாநாட்டு மண்டபம் அமைந்திருக்கும் கேபிஜேவுக்குச் சொந்தமான 2 மில்லியன் மதிப்பிலான நிலத்தை வேள்பாரி வெறும் ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கு வாங்கியுள்ளார்.
இரண்டாவது குற்றச்சாட்டில், சுங்கை சிப்புட், டோவன்பி தோட்டத்தில், என்எல்எஃப்சிக்குச் சொந்தமான ஏக்கருக்கு 68,000 ரிங்கிட் பெறுமான 114 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் தலா 11,280 ரிங்கிட் விலையில் மஇகாவின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான துன் சாமிவேலு வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் சுங்கை சிப்புட்டில் இருக்கும் அந்தக் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாக லோகநாதன் குறிப்பிட்டார்.
அந்த நிலங்கள் யாவும் வேள்பாரியின் குடும்ப நிறுவனத்துக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளன.
அந்த இரு நிலங்களும் சந்தைக்கும் குறைவான விலையில் வாங்கப்பட்டிருப்பதால், அரசுக்குத் செலுத்த வேண்டிய வரி குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இக்குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் முழுமையாக விசாரணை செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று லோகநாதன் கேட்டுக் கொண்டார்.
இது சம்பந்தமாக தாம் இரு முறை எம்ஏசிசியிடம் புகார் அளித்திருப் பதாகவும் ஆனால், அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது சம்பந்தமாகக் கருத்துரைத்த வேள்பாரி, கடந்த 20 ஆண்டுகளாக லோகநாதன் இந்தப் புகார்களைத் தெரிவித்து வருவதாகவும், அது தமக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அது சம்பந்தமாகத் தமது வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + fifteen =