குறைந்தபட்ச சம்பளம்; 1 அல்லது 2 மாதங்களில் செயல்படுத்தப்படும்

கடந்தாண்டு அரசாங்கம் உறுதியளித்திருந்த 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம், ஒன்று அல்லது இரு மாதங்களில் அமல்படுத்தப்படுமென இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு, குறைந்த பட்ச சம்பளம் விரைவில் அமல்படுத்தப்படுமென மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்திருந்தார்.
எனினும், விரைவில் என்றால் எப்போது? அதற்கு ஒரு கால வரையறையைக் குறிப்பிடுமாறு, எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர், அதன் தொடர்பான அறிவிப்பை செய்ய வேண்டுமென்றால் அமைச்சரவையிடம் இருந்தும் பிரதமரிடம் இருந்தும் முதலில் அனுமதி கிடைக்க வேண்டும்.
அத்துடன் அதன் தொடர்பான ஆய்வு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதால், இன்னும் ஒன்று அல்லது இரு மாதங்களில் அந்த குறைந்தபட்ச சம்பள முறையை அமல்படுத்த முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 18 =