குறைக்கப்பட்ட பள்ளி விடுமுறைகள்

கடந்த செவ்வாய்க்கிழமை திருத்தம் செய்யப்பட்ட பள்ளி நாள்காட்டியை கல்வியமைச்சு வெளியிட்டது. அதில் மத்திய, ஆண்டு இறுதி விடுமுறைகள் வெகுவாகக் குறைக்கப் பட்டிருந்தன.
இந்த புதிய நாள்காட்டி தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட பழைய நாள்காட் டியை மறுபடியும் அமல்படுத்துமாறு அவர்கள் கல்வியமைச்சைக் கேட்டுக் கொண்டனர்.
மத்திய செமஸ்டர் 9 நாட்களில் இருந்து 5 நாட்கள் குறைக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 20லிருந்து ஆகஸ்ட் 28 வரை அமலாக்கம் செய்யப்படும்.
இதனிடையே ஆண்டின் இறுதி விடுமுறை 42 நாட்களில் இருந்து மாநிலங்களைப் பொறுத்து 13 அல்லது 14 நாட்களாகக் குறைக்கப்பட்டிருக் கின்றன. அந்த விடுமுறை டிசம்பர் 18லிருந்து டிசம்பர் 31 வரை அமலாக்கம் செய்யப்படும்.
ஆசிரியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கமான என்யூடிபி பழைய நாள்காட்டி முறைக்கே மறுபடியும் திரும்புமாறு கல்வியமைச்சைக் கேட்டுக் கொண்டது.
விடுமுறை நாட்களை கல்வியமைச்சு குறைத்ததற்கு ஆசிரியர்கள் தங்களின் பாடத் திட்டத்தை இவ்வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய காரணமாகும். எம்சிஓ
காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல்
இருந்ததைச் சரி செய்வதற்காக கல்வியமைச்சு இவ்வருடம் விடுமுறைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
இதுபற்றி கருத்துரைத்த என்யூடிபி தலைவர் அமிருடின் அவாங், இதுபற்றி கல்வியமைச்சு கவலைப்படத் தேவையில்லை. காரணம் பிரத்தியேக வகுப்புகள், ஆன்லைன் கற்பித்தல் மூலம் ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்தை முடிக்க முடியும் என்று கல்வியமைச்சுக்கு அவர் உறுதியளித்தார்.
எம்சிஓ காலகட்டத்தில் ஆசிரியர்கள் பாடங்களைத் தயார் செய்வதிலும் அவற்றைப் பதிவு செய்வதிலும் கடுமையாகப் பாடுபட்டிருக்கின்றனர். கல்வியமைச்சின் புதிய நாள்காட்டியால் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கின்றனர் என்று அமிருடின் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =