குப்பைத் தொட்டிகள் இல்லாமல் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பு

0

தீபாவளி காலங்களில் தினமும் பெய்து வந்த மழையால், கம்போங் ஜாவா சாலை ஓரங்களில் தாழ்வானப் பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்து விடுகின்றது .இருந்தாலும் முன்பு போல கொசுக்களின் தொல்லையும் குறைந்த பாடில்லை.
தற்போது கால் வாய்களில் தூர்வாருவதால் முன்னைப்போல படுமோசமாக இல்லை என்றாலும் சில இடங்களில் வெள்ளம் வடியாமல் நீர் தேக்கம் ஏற்பட்டு கொசுக்களின் தொல்லையும், விஷ ஜந்துக்களின் படை எடுப்பும் தொடங்கி விட்டன என்றே சொல்லலாம் என்றனர் குடியிருப்பாளர்கள்.
சாலையோரங்களில் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகள் இல்லாதக் காரணத்தால், குடியிருப்பாளர்கள் மனம் போன போக்கில் குப்பைகளை விட்டெறிந்து செல்கின்றார்கள். துப்புரவு பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்தாலும் குப்பை அள்ளும் லோரிகள் சரியாக வருவதில்லை என்று கம்போங் ஜாவா 5 ஆவது மையில் குடியிருப்பாளர்கள் முறையிட்டனர்.
இந்த புகாரை செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென அவர்கள் முறையிட்டனர்.
அடுத்து கம்போங் ஜாவா 6 ஆவது மைலில் உள்ள பஸ் நிறுத்தம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் பழுதுபார்க்காமல் ஷா ஆலம் நகராண்மைக் கழகம் காலத்தைக் கடத்துவதாகவும் சாலையோரத்தில் முறையான குப்பைத் தொட்டிகளும் இல்லை என வட்டார மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =