குப்பைகளைக் கொட்டுவதற்கும் ஒரு வரம்பில்லையா?

இங்கு, ஜெஞ்ஜாரோம் சுங்கை ரம்பை வட்டாரத்தில் வசிப்போர் சிலர் வரம்பு மீறி, பிள்ளைகள் விளையாடும் மைதானத்திலும், மக்கள் நடமாடும் சாலையோரங்களிலும் குப்பைகளைக் கொட்டிச் சென்றுள்ளனர்.
அவற்றை நெகிழிப் பைகளில் போட்டு வைக்கவுமில்லை.
இவர்களின் நடவடிக் கைகளுக்கு ஓர் அளவே இல்லையா? இது குறித்து, இன்று திங்கள்கிழமை கோலலங்காட் மாநகர் மன்ற சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்படுமென மாவட்ட மன்ற உறுப்பினரான இர்வான் இஸ்மாயின் தெரிவித்தார்.
வார இறுதி விடுமுறை நாளாக இருந்தும், விடுப்பு எடுக்காமல் இங்கு சேர்ந்துள்ள குப்பைகளை குத்தகைப் பணியாளர்களை வைத்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டதாக இர்வான் வருத்தத்துடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 − 1 =