குணா மீதான குற்றச்சாட்டுகள் மீட்பு அம்னோ எதிர்ப்பு

0

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் மீதான புதிய குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டதற்கு எதிராக அம்னோ கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
விடுதலைப் புலிகள் தொடர்பாக மலாக்கா ஆயர் குரோ மற்றும் கோலாலம்பூர் நீதிமன்றங்களில் பி. குணசேகரன் இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனது வீட்டிலும் அலுவலகத்திலும் விடுதலை புலிகள் தொடர்பான படங்களை வைத்திருந்ததற்காக பி. குணசேகரன் மீது புதிய இரண்டு குற்றச்சாட்டுகள் நேற்று முன் தினம் சிரம்பான் நீதிமன்றத்தில் பதிவு செய்ய இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், அந்த புதிய குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் அரசு தரப்பால் மீட்டுக் கொள்ளப்பட்டன.
அந்த குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டதற்கு எதிராக அம்னோ தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்சமயம் கைது செய்யப்பட்டவர்கள் ஜசெக உறுப்பினர் அல்லது அதன் ஆதரவாளர்கள் என்பதால்தான் குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டதா என அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏன் ஜசெக தலைவர்களுக்கு இந்த சிறப்புச் சலுகை. தீவிரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு ஏன் இது போன்ற சலுகைகள் காட்டப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =