குட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ச சம்பவம்

0

பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியா கூட்டாச்சியில் உள்ள புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து மூன்று மாலுமிகள் 23 அடி நீளம் உள்ள படகு மூலம் சென்றனர். இரு தீவுகளுக்கும் இடையில் உள்ள தூரம் 42 கி.மீட்டர். ஆனால் மாலுமிகள் சென்று கொண்டிருந்தபோது, எரிபொருள் காலியாகியதால் அவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் கரை ஒதுங்கினர்.
அங்கிருந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் படகை கரையில் ஏற்றி வைத்தனர். அதன்பின் மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர். பின்னர் யாராவது காப்பாற்ற வருவார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள். புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள், ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். திங்கட்கிழமை வரை யாரும் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. இதனால் சோர்வடைந்து மூன்று பேரும் மயங்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் அந்ததீவு அருகில் வரும்போது திடீரென மழை பெய்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திரும்பிச் செல்ல முயன்றது. அப்போது அதில் இருந்து அதிகாரி ஒருவர் தீவு மணலில் ஏதோ எழுதியிருப்பதை கண்டார்.
உடனடியாக அருகே இருந்த ஆஸ்திரேலியாவின் கப்பற்படை விமானத்தை தொடர்பு கொண்ட அந்த தீவில் இறங்கு தேடும்படி கேட்டுக்கொண்டனர்.
அவர்களும் அந்த தீவில் இறங்கி பார்க்கும்போது அந்த மூன்று பேரும் அங்கு இருந்ததை கண்டுபிடித்து, அவர்களை காப்பாற்றியுள்ளனர். நாம் கடற்கரையில் வேடிக்கையாக மணலில் எழுதி விளையாடுவோம். அந்த வகையில் எழுதிய எழுத்து மூன்று பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 11 =