குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூரின் ஜோகர் டவுன் பகுதியில் இன்று குண்டுவெடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர்.  
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், மருத்துவமனை அருகில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =