குடிபோதையில் அபாயகரமாக காரோட்டுவோருக்கு 20 ஆண்டு சிறை

சாலைப் போக்குவரத்துச் சட்டம் திருத்தப்பட்ட பின்னர், குடிபோதையில் அபாயகரமாக வாகனங்களைச் செலுத்து வோருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப் படலாம் என சட்டத்துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்தார்.அச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், குடிபோதையில் காரோட்டு வோருக்குக் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அதனை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதனை மேலும் ஆராய போக்குவரத்து அமைச்சு பணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய சட்டத்தில் குடிபோதையில் அபாயகரமாகக் காரோட்டுவோருக்கு 3 லிருந்து 10 ஆண்டு வரையிலான சிறையும் 20,000 ரிங்கிட் அபராதமும் 3 ஆண்டு காலத்துக்குக் காரோட்டும் உரிமம் தடுத்து வைக்கப்பட சட்டம் வகை செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − four =