குடிநுழைவு அதிகாரிகள் மூவர் கைது

0

தங்கள் தாயகத்திற்குத் திரும்பவிருந்த அந்நிய நாட்டினருக்கு இணையதள வழி நியமன முறையைப் பின்பற்றாமல் (எஸ்டிஓ) பாஸ் வழங்குவதைத் துரிதப்படுத்திய 3 குடிநுழைவு அதிகாரிகள் கையூட்டு பெற்றுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று தொடங்கி வரும் 14 செப்டம்பர் 2020 வரை தடுப்புக் காவலுக்கு மாஜிஸ்திரேட் ஷா வீரா அப்துல் ஹலிம் உத்தரவிட்டார்.
புத்ராஜெயாவிலுள்ள ‘எம்ஏசிசி’ எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமுலம் வழங்க ஆஜரான போது 33 முதல் 35 வயது வரையிலான அந்த 3 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல் படுத்தப்பட்டதில் இருந்து நாடு திரும்ப விரும்பிய அந்நிய நாட்டினரிடம் இடைத்தரகர்கள் மூலம் இந்த குடிநுழைவு அதிகாரிகள் செயல்பட்டனர் என்று நம்பப்படுகிறது.
எஸ்டிஓவைப் பின்பற்றாமல் பாஸ் வழங்குவதற்கு ஒவ்வொரு பாஸிற்கும் 300 வெள்ளி முதல் 500 வெள்ளி வரை இந்த குடிநுழைவு அதிகாரிகள் பெற்று வந்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டதை புத்ராஜெயா எம்ஏசிசி இயக்குநர் ஹஸ்பிலா முகமட் சாலே உறுதிப்படுத்தினர்.
எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 17 (ஏ)இன் கீழ் இச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 2 =