குடிநுழைவுத் துறை அதிகாரி என கூறி 21,126 வெள்ளி ரொக்கப் பணம் கொள்ளை

0

குடி நுழைவுத் துறை அதிகாரி என தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட ஆடவர் ஒருவருடன் வந்த 3 ஆடவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில், இங்குள்ள புக்கிட் மெர்தாஜம், ஜாலான் மெகாட் ஹருண் பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்திய சோதனையில் 21,126 வெள்ளி ரொக்கப் பணம் உட்பட தங்க நகைகள்,கைத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களை அபகரித்துச் சென்ற விவகாரம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 47 வயதுடைய ஆடவர் குடி நுழைவுத் துறையின்அனுமதி பெற்ற ஏஜெண்டாக செயல்பட்டவர். போலியான குடிநுழைவுத் துறையின் அனுமதி இல்லாத ஆவணங்களை விநியோகித்ததன் பேரில் அந்த ஆடவரின் வீட்டில் சோதனை நடத்தப் போவதாக அவர்கள் கூறினர். சோதனைக்கு சம்மதித்த போது ஐவர் அடங்கிய அந்தக் கும்பல் தங்களின் உடமைகள் அனைத்தையும் கொள்ளையிட்டு தப்பியதாக உடமைகளை இழந்தவர் புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்ட காவல் நிலையத்தில் புகார் ஒன்றை செய்துள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தை உறுதிப்படுத்திய புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்ட காவல் துறைத் தலைவர் நிக் ரோஸ் அசஹான், காவல் துறையைச் சேர்ந்த டி9 குற்றச் சம்பவ துடைத்தொழிப்பு நடவடிக்கை பிரிவுக்கு, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். குற்றப் புலனாய்வு அதிகாரி கைருல் அன்வார் தலைமையில் தீவிரமாக தேடப்பட்டு வந்த அந்த கொள்ளைக் கும்பல், புக்கிட் மெர்தாஜம் மற்றும் கெடா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டது என ஏசிபி நிக் ரோஸ் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =