குடிநுழைவுத்துறை பாஸ் வைத்திருப்பவர்கள், அவர்கள் குடும்பத்தினர் சபாவிற்கு வருகை புரியலாம்

அம்னோ, பாஸ், மஇகா, மசீச உட்பட 12 அரசியல் கட்சிகள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு தங்களின் பிளவுபடாத ஆதரவை வழங்கியுள்ளன.
மத்திய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக பக்காத்தான் ஹராப்பான் ஆதரவைத் திரட்டி வரும் வேளையில், தமது அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகள் வழங்கியுள்ளதாக பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் புத்ராஜெயாவில் நடந்த கூட்டத்தில் பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின், அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி, பாஸ் தலைவர் ஹாடி அவாங், மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மசீச தலைவர் வீ கா சியோங், சரவாக் பிபிபி கட்சியின் தலைவர் அபாங் ஜொஹாரி உட்பட அனைத்துத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு தங்களின் முழுமையான ஆதரவை தொடர்ந்து வழங்கி வரப்போவதாக இந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் கூறினர். பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
அதே போல் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹஸான், முஹிடின் மீது நம்பிக்கைத் தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.
வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த தீர்மானங்கள் விவாதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 13 =