குடிநுழைவுத்துறையின் நடவடிக்கையில் 26 சட்டவிரோத குடியேறிகள் கைது

சட்ட விரோத அந்நிய நாட்டினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில்,26 பேரை பினாங்கு மாநில குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
பினாங்கு பாயான் லெப்பாஸிலுள்ள டைமன்ட் வேலி தொழிற்பேட்டை பகுதி,தாய்லாந்து உணவகம்,கார் கழுவும் பட்டறை மற்றும் உணவுக்கடைகள் ஆகியவற்றில் இந்த சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
குடிநுழைவுத்துறையின் குற்றத்தின் கீழ் 16 வங்காளதேச ஆடவர்கள்,5 மியன்மார் ஆடவர்கள்,5 மியன்மார் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் மொத்தம் 45 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக,தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமென குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 8 =