குடிநீர் பிரச்சினைக்கு அரசாங்கம் உதவ வேண்டும்

இங்குள்ள சுங்கை சிப்புட், லாசா, கம்போங் காஜாங்கில் வசிக்கும் பூர்வீகக் குடியினர் நீண்ட காலமாக ஆற்று நீரைத்தான் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு அதே நீரை பயன்படுத்த முடியும் என கம்போங் காஜாங் பூர்வீகக் குடியினரை சந்தித்த சுங்கை சிப்புட் பெனாராஜூ இன்சான் அமைப்பின் தலைவர், இந்திராணி செல்வகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கம்பத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாம் அனைவரும் நினைத்த நேரத்தில் குழாய் நீரை பயன்படுத்தலாம் நமக்கு அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள் ளது. ஆனால், இந்த பூர்வீகக் குடியினர் இன்னும் கூட ஆற்று நீரை நம்பியே வாழ்ந்து கொண்டிக்கின்றனர். இன்னும் எவ்வளவு காலம் இவர்கள் இப்படியே இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, இங்கு பக்கத்தில் இருக்கும் பாவுங்கில் வசிக்கும் பூர்வீகக் குடியினருக்கு கூட குழாய் நீர் வசதி உள்ளது. ஆனால், கம்போங் காஜாங் மக்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு இல்லை.
மேலும், வெளியிலிருந்து வரும் சிலர் சட்டவிரோதமாக இங்குள்ள மரங்களை வெட்டுகின்றனர். மரங்கள் வெட்டப்பட்ட பின்னர், குப்பைகளை ஆற்றில் வீசுகின்றனர். அதனால் ஆறு அசுத்தமாகிறது.
ஆனால், அந்த நடவடிக்கைகள் குறித்து வனத்துறை கண் காணிக் கவில்லை.
இதுவே இங்குள்ள மக்களின் பிரச்சினை களாகும். மேலும், இங்கு பூர்வீகக் குடியினர் விவசாயம் செய்யக் கூட அரசாங்கம் நிலம் வழங்கவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்து 63 வருடங்களான பின்னர், பூர்வீகக் குடியினர் மட்டுமே இப்படி வாழ்ந்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 7 =