கீழ்ப்பேராக் மாவட்ட தொழிற்சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கை


இங்கு அமைத்திருக்கும் தனியார் தொழிற்சாலைகளில் அரசு அதிகாரிகள் குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக புரிந்துள்ள குற்றத்திற்காக 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனி நபரின் குற்றத்திற்கு 1,500 வெள்ளியும், நிறுவன அனுமதி ஆவணம் இல்லாத குற்றங்களுக்கு 500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி அகமது அட்னான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று தொடர்ந்து அதிகரிக்ககூடாது என்னும் கடமையில் காவல் துறையினர், சுங்கத்துறையினர், குடிநுழைவு துறையினர், நகராண்மை கழக நிர்வாகத்தினர், சொக்சோ அதிகாரிகள், சுகாதார இலாகா அதிகாரிகள், பொது தற்காப்பு படையினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாவட்டத்தில் உள்ள 19 தனியார் தொழிற்சாலைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மிக மிக அவசியம் என்றும் இனி அவ்வப்போது இந்த சோதனை திட்டமிட்டு நடத்தப்படும் என்று ஓசிபிடி அட்னான் குறிப்பிட்டார்.
சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்:
மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பணியாளர்களுக்கு தொற்று இருப்பதாக மருத்துவமனை உறுதிப்படுத்தும் தொழிலாளர்கள் கட்டாயம் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்துவது முதலாளிமார்களின் கடமை யாகும்.
அப்படி ஒரு வேலை கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளான அந்த பணியாளர் வேலை செய்துக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அந்த தொழிற்சாலை 14 நாள்களுக்கு மூடப்படும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது என்றும் முன்னாள் பத்துகாஜா காவல் நிலைய தலைவருமான அகமது அட்னான் மீண்டும் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − nine =