கிஷோணாவுக்கு தங்கப் பதக்கம்

0

சீ போட்டியில் மகளிர் ஒற்றையர் பூப்பந்து பிரிவின் இறுதியாட்டத்தில் மலேசியாவின் 21 வயதான கிஷோணா செல்வதுரை தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ருஷேலி ஹர்த்தானைவா 20-22, 21-14, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

சீ போட்டியில் முதல்முறையாக மலேசியா குழுவில் இடம்பெற்றிருந்த உலகின் 104வது நிலை ஆட்டக்காரரான கிஷோணா முதல் ஆட்டத்தில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி அடுக்கடுக்காக புள்ளிகளை எடுத்து முன்னேறினார். 20 புள்ளிகளை எடுத்து வெற்றிக்கான கடைசி புள்ளியை பெறுவதற்கான முயற்சியின்போது அவர் சில தவறுகளை செய்ததால் இந்த ஆட்டத்தில் 22-20 என்ற புள்ளிக் கணக்கில் ருஷேலி வெற்றி பெற்றார்.

எனினும் இரண்டாவது ஆட்டத்தில் கிஷோணா எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி 21க்கு 14 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிப்பதற்கு மூன்றாவது ஆட்டத்தில் விளையாடுவதற்கான சூழ்நிலையை கிஷோணா ஏற்படுத்திக் கொண்டார்.

சிரம்பானைச் சேர்ந்த கிஷோணா மூன்றாவது ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு 21க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் ரோஷிலியை வீழ்த்தி பூப்பந்து விளையாட்டில் மலேசியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளார். இதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் கடந்த முறை சீ போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை மீண்டும் மலேசியா வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டுள்ளது. கிஷோணாவைப் பொறுத்தவரை இந்த வெற்றி அற்புதமான ஒன்றாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 16 =