குழாய் வெடித்ததன் காரணமாக கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் நேற்று பிற்பகல் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.
ஷா ஆலம் செக்ஷன் 15 இல் உள்ள பிரதான குழாய் வெடித்ததால் நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் அறிக்கை ஒன்றில் கூறியது.
பழுதுபார்க்கும் பணி சுமுகமாக மேற்கொள்ளப் படுவதை உறுதிசெய்ய ஆயர் சிலாங்கூர் நீர் விநியோகத்தைத் தடைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த நீர் விநியோகத் தடையால் கிள்ளான் – ஷா ஆலமில் 58 இடங்களிலும் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் 72 இடங்களிலும் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரிலும் அக்டோபரிலும் கிள்ளான், ஷா ஆலம், கோல லங்காட், சிப்பாங் ஆகிய இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.