கிள்ளான் மருத்துவமனைக்கு மேலும் ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள்

கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவ மனைக்கு மேலும் ஐந்து ஆம் புலன்ஸ் வாகனங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது என்று அதன் இயக்குநர் டாக்டர் ஸூல்கர்னைன் முகமட் ராவி தெரிவித்துள்ளார். தற்போதைய அவசரகால நிலையைக் கருத்தில் கொண்டும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற் பட்டுள்ள அளவுக்கு அதிகமான தேவையைக் கருத்தில் கொண்டும் அந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார். பாதிக்கப்பட்ட மக்களிட மிருந்து எங்களுக்கு ஏராள மான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களுக்கு உதவியளிக்கப் போதுமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனையிடம் இல்லாமல் இருந்தது. இப்போது ஐந்து வாகனங்கள் கிடைத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்றார் அவர். ‘பொதுமருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனப் பற்றாக் குறையால் திணறிவரும் கிள்ளான் வாசிகள்’ எனும் தலைப்பில் ஆங்கிய இணையப் பத்திரிகையொன்று நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. கோவிட்-19 பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்ட தமது தொகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அம்மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போனது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவை அப்பத்திரிகை மேற்கோள்காட்டியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =