கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் திருமணம் நடத்தலாம்

0

கிள்ளானில் அமைந் திருக்கும் புகழ்பெற்ற சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் அரசாங்க உத்தரவின் பேரில் 1ஆம் தேதி முதல் திருமணங்கள் நடத்தலாம் என்று ஆலயத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலயம் மிகவும் சிறப்புற்று விளங்கி வருகிறது. பக்தர்கள் அதிகமான பேர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்போது ஆலய மண்டபத்தில் திருமணங்கள் நடைபெறவுள்ளன.
அதற்கான முன் பதிவும் நடந்து வருகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டை மதித்து அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். 1 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மலேசிய பிரஜைகளுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். திருமண வைபவத்தில் 250 பேர் கலந்து கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. திருமணம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் எங்கள் 2 மண்டபங்களிலும் உள்ளன. அனைவரும் வந்து இப்பொழுதே முன் பதிவு செய்து கொள்ளலாம். திருமண நிச்சயதார்த்தமும் செய்யலாம் என்று ஆலயத் தலைவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =