கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் அனைத்துலக யோகா தினம்

0

கிள்ளான், ஆக. 10-
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்துலக யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றோடு இணைந்து வாழ்க்கை விஞ்ஞான மனவளக்கலை மன்றம் மலேசியா அமைப்பு இந்த நிகழ்வை நடத்தியது. இதில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாணவர்கள் அனைவரும் சேர்ந்து இறைவணக்கம் பாடினர். அதைத் தொடர்ந்து சிறப்பு வருகையாளர்கள் குத்துவிளக்கேற்றினர். அடுத்த நிகழ்வாக வாழ்க்கை விஞ்ஞான மனவளக்கலை மன்றம் மலேசியா நிறுவனரும் மனவளக்கவை பேராசிரியருமான பிரசன்னா தியானத்தை வழி நடத்தினார். மாணவர்கள் அனைவரும் மிக அமைதியாக தியானம் செய்ததையும் சேர்ந்து சிறப்பு விருந்தினர்களும் தியானம் செய்வதையும் பார்க்க கூடியதாக இருந்தது.
தொடர்ந்து யோகா நிகழ்வுகளை மாணவர்கள் சிறப்பாக செய்தார்கள். அதனை தொடர்நது சிறப்பு வருகையாளர்களுக்கு மன்றத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது. பின் பிரமுகர்கள் உரை நிகழ்த்தினர்.


சிறப்பு வருகையாளரான செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தமது உரையில் மாணவர்களின் கட்டொழுங்கையும் உடல் நலத்தையும் மனவளத்தையும் பாதுகாக்க யோகா, தியானம் ஆகியவை மிகவும் முக்கியமான ஒன்றாகியுள்ளது. அந்த வகையில் இப்பள்ளியில் முறைப்படி யோகா, தியானம் என்பன சொல்லிக்கொடுக்கப்படுவதை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். மாணவர்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் நல் மனிதர்களாக வரவேண்டும் என்று குறிப்பிட்டார் பள்ளி தலைமையாசிரியர் சந்திரன் பள்ளியில் யோகா தியானம் நன்னெறி கல்வி என்பவற்றை போதிக்கும் மனவளக்கலை யோகா மன்றத்தின் ஆசிரியர்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாக கூறினார்.


தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை சிறப்பு பிரமுகர்கள் எடுத்து வழங்கினர். நன்றியுரையாற்றிய மனவளக்கலை பேராசிரியர் பிரசன்னா மாணவர்களிடையே யோகா, தியானம் என்பன பல நற்பண்புகளை வளர்ப்பதோடு உடல் நல, மன வள மேம்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. அத்துடன் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இயங்க வைப்பதுடன் மனதுக்கு ஓர்மைத்திறன் உள்வாங்கும் திறன் படைப்பாற்றல் திறன், நினைவாற்றல் திறன் என்பவற்றையும் தருவதோடு வாழ்க்கையில் தடுமாறி தடம்மாறி செல்லாமல் ஒரு சிறந்த குடிமகனாக வாழ வழி செய்கின்றது என்று குறிப்பிட்டார்.
நிறைவாக ’உலக நல வாழ்த்து பாடலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாட நிகழ்ச்சி நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =