கிளானாங் கடற்கரைப் பகுதியில் துப்புரவுப் பணிகள்

சுற்றுலாத் தலங்களுக்கு மிகவும் பிரசித்தி ப் பெற்ற கடற்கரைப் பகுதிகளை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்வதில் அனைவருக்கும் சமூகக் கடப்பாடுகள் உண்டு. இருப்பினும் சிலரின் அலட்சியப் போக்கால் மக்கள் விரும்பி நாடிச் செல்லும் சில கடற்கரைப் பகுதிகள் தூய்மையற்ற நிலையில் இருப்பதால் பலர் அங்கு செல்வதை ப் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பந்திங் நகரை அடுத்துள்ள கிளானாங் கடற்கரைப் பகுதிகளில் நிறைந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் கூட்டுப் பணியை கோலலங்காட் மூடா இளைஞர் இயக்கத்தினர் மேற் கொண்டனர். இந்த க் கடலோரத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் அங்கு மிங்கும் நிறைந்து கிடந்த கனிம நீர் பாட்டில்கள் உணவுப் பொட்டலங்களின் காலி டப்பாக்கள் ஆகியவற்றை இந்திய இளைஞர் குழுவினர் நெகிழிப் பைகளில் சேகரித்தனர். நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மேற் கொண்ட இந்த நடவடிக்கை யின் போது சுமார் 30 நெகிழிப் பைகளில் கடற் கரைப் பகுதியில் காணப்பட்ட குப்பைகளைச் சேகரித்ததாக இதற்கு பொறுப்பேற்ற முகமட் பிட்ரி தெரிவித்தார். சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப் படும் கிளானாங் கடற்கரை யின் தரத்தை மேம்படுத்த இனி வரும் காலங்களில் மாதம் ஒரு முறையாவது எங்களின் துப்புரவுப் பணி நடவடிக்கை கள் இங்கே தொடரும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =