கிளன் மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கூடுதலான மாணவர்களைச் சேர்க்க வேண்டி பிரசாரம் முன்னெடுப்பு

0

ஷாஆலம் கிளன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் அடுத்த ஆண்டு கூடுதலான மாணவர்களை சேர்க்கும் வண்ணம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரிய அமைப்பு, முன்னாள் மாணவர் கள் சங்கம், ஆசிரியர் ஆசிரியை கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.
தமிழ்ப்பள்ளியில் மாணவர் களைச் சேர்க்கவும். தாய் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கவும் வேண்டும்.
அதன் பொருட்டு கிளன்மேரி தோட்டப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய தலைமையாசிரியர் தமிழ்ச் செல்வியும், ஆசிரியர்களும் மற்றும் இதர தரப்பினரும் அருகில் உள்ள வீடமைப்புப் பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்யவுள்ளனர்.
கிளன்மேரி தமிழ்ப்பள்ளி வளாகத்தின் வீடமைப்புப் பகுதி களில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு போக்கு வரத்து வசதியும் செய்து தரப் படும் என்று அவர் கூறினார். ஏறக்குறைய 20 மாணவர்களுக்குள் இருப்பார்களேயானால் தாங்கள் உதவ தாயாராக உள்ளதாகவும் கூறினர். பாலர் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே உள்ளது. பெற்றோர் கள் தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளை களை அனுப்பி வைக்க முன்வர வேண்டும் என ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார். கிளன்மேரி தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு வசதியான விளையாட்டு திடல், வகுப்பறை கள் உள்ளன.
பெரிய பள்ளித் திடலை கொண்ட பள்ளியாக கிளன்மேரி தமிழ்ப்பள்ளி திகழ் கிறது. சிறந்த ஆசிரியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்ப்பள்ளி, தாய்மொழிக் கல்வியே நமது முதல் தேர்வாக அமைய வேண்டும்.
தமிழ்ப்பள்ளிக்கு மகத்தான ஆதரவை வழங்குவர் என பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இப்பிரசாரத்தை தொடங்கியதாக ராஜேந்திரன் நம்பிக்கையுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 5 =