கிரேட் ஈகல் செம்பனைத் தோட்டப் பங்கு முதலீடு – விசாரணையில் உள்ளது

நஜிப் ரசாக்கின் ஆட்சியின்போது, இந்தோனேசிய தோட்டத் துறை பங்கு பரிவர்த்தனையில் பெல்டா நிறுவனம் ஏமாற்றப்பட்டதாகப் செய்யப்பட்ட புகார் ஏப்ரல் மாதம் கிடைக்கப்பட்டதாகவும், அதன் விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் போலீஸ் துணைத் தலைவர் மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

அதில் பல நிதி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதால், அந்த விசாரணை முடிவடைய சிறிது காலம் பிடிக்கும்.

இந்தோனேசிய செல்வந்தர் பீட்டர் சோன்டாக்கின் ராஜாவாளி குழுமத்தின் கிளை நிறுவனமான ஈகல் ஹை நிறுவனத்தின் 37 விழுக்காட்டுப் பங்குகளை 505 மில்லியன் டாலருக்கு(ரிம. 230 கோடி) வாங்க நஜிப் ரசாக் அறிவுறுத்தியதாக பெல்டாவின் தலைமை இயக்குநர் ஓஸ்மான் ஓமார் புகார் தெரிவித்திருந்தார்.

பீட்டர் சோன்டாக் நஜிப் ரசாக்கின் நெருங்கிய நண்பர் ஆகும். அவரின் நிறுவனப் பங்குகளை சந்தை விலைக்கு அதிகமாக, 344 விழுக்காட்டு விலையில் வாங்கியதாக ஓஸ்மான் குறிப்பிட்டிருந்தார். அதன் உண்மையான விலையானது 114 மில்லியன் டாலராகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 12 =