கிருஷ்ணருக்கு வித்தியாசமான அலங்காரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில், ‘டாக்கூர்ஜி ஸ்ரீநாதர்’ என்று அழைக்கப்படும், கிருஷ்ண பகவானின் ஸ்ரீநாத் துவாரகா கோவில் அமைந்திருக்கிறது.

பளிங்குக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள, இங்குள்ள கண்ணனுக்கு அலங்காரம் செய்யும் முறையே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இவருடைய மேனியில் ஒரு வகையான பசையைத் தடவி, அதில் ஆடை, அணிகலன்களை ஒட்டி வைக்கிறார்கள்.

தினமும் காலை 5 மணியில் இருந்து மாலை 5 மணி வரை, ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு முறை கிருஷ்ணரின் அலங்காரத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =