கிம்மாஸ்-ஜொகூர்பாரு இரட்டைத் தண்டவாள இரயில் திட்டம்: மக்கள் அதிருப்தி

கிம்மாஸிலிருந்து ஜொகூர் பாருவுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கும் இரட்டைத் தண்டவாள இரயில் திட்டம் சில பாதகங்களை ஏற்படுத்துவதாகவும் அதனைக் களையும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
அத்திட்டம் 124 கோடி ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திட்டத்தில் தெனாங், சாமேக், செனாய், கெனுவாங், லாபிஸ், பெக்கோக், பாலோ, குளுவாங், மெங்கிபோல், ரெங்காம், லாயாங் லாயாங், கூலாய் மற்றும் கெம்பாஸ் பாரு ஆகிய பட்டணங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அது பற்றித் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய லாபிஸ் பொதுமக்கள், உள்ளூர் காரர்களின் பிரச்சினைகளையும், கருத்தினையும் கேட் காமல் அத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள தாகவும் அதில் பொதுமக்களின் பாதுகாப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
லாபிஸ் நகரின் வாகனங் களுக்கான 500 மீட்டர் மேம்பாலம் இன்னும் 5 மீட்டர் உயர்த்தப்படுவதால், லாபிஸ் நகர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பிரிக்கப்படுவதாகவும் லாபிஸ்-யோங்பெங் வாகனமோட்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, திரும்பும் சிரமம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அந்த மேம்பாலம் உயரமாகவும் அதில் ஊசிமுனை வளைவு இருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இத்திட்டத்தின் மூலம் லாபிஸ் வர்த்தகர்களின் வியாபாரம் வெகுவாகப் பாதிக்கும் என்றும் இரயில் தண்டவாளம் நகரின் ஊடே செல்வதால், ஆபத்து அவசர வேளைகளில் போலீஸ் பாதுகாப்பு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது.
அந்த இரட்டைத் தண்டவாளத் திட்டத்தில் சிகாமாட்டில் மட்டுமே இரயில் செல்ல மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அம்மாதிரியான மேம்பாலம் லாபிஸிலும் அமைக்கப்பட்டால் உள்ளூர் மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − fourteen =