கிந்தா இந்தியர் சங்கத்தின் மாபெரும் பொங்கல் விழா

0

கலை, கலாசாரத்தை பேணுவதில் முதன்மை வகிக்கும் கிந்தா இந்தியர் சங்கம் 2020-ஆம் ஆண்டு பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடியது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
இவ்விழாவில் டான்ஸ்ரீ ராஜூ, ஈப்போ பாராட் ம.இ.கா தலைவர், எஸ்.ஜெயகோபி, பேராக் மாநில ம.இ.கா தலைவர், வி.இளங்கோ, ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தின் தலைவர், அருள் ஆறுமுகம், பிரிம் இயக்கத்தின் அரிப் அலியா, ஆகியோர் உட்பட பல இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
கிந்தா இந்தியர் சங்கத்தின் மகளிர் அணி ஒன்றிணைந்து பொங்கல் வைக்க, அங்கிருந்த அனைவருமே பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.
மேலும், மக்களை கவரும் வகையிலான படைப்புகள் குறிப்பாக, சிலம்பாட்டம், பரதம், நடனங்கள் அனைவரின் கைதட்டலைப் பெற்றது.
தொடர்ந்து, வருகையளித்த மக்களுக்கு அச்சங்கத்தினர் வாழையிலை போட்டு, உணவுகளை பரிமாறினர்.
இதனிடையே, அச்சங்கத்தின் தலைவர், எம்.சௌந்தரபாண்டியன் கூறுகையில் 114 வருடங்களை கடந்த கிந்தா இந்தியர் சங்கம் என் தலைமைத்துவத்தில் இப்பொழுது பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, நம்முடைய கலை, கலாசாரம், பண்பாடுகளை பேணிக்காக்க வேண்டும் என்று இவ்விழாவை ஏற்பாடு செய்தோம். இனி ஆண்டுதோறும் இவ்விழாவை சிறப்பாக நடத்துவோம் என்றார்.
அதே வேளை, இன்று 400 பேருக்கு விருந்துபசரிப்பும் ஏற்பாடு செய்தோம். மக்கள் மகிழ்ச்சியாக இவ்விழாவை கொண்டாட வேண்டும்.
அவர்களின் மன திருப்தியே எங்களின் எதிர்பார்ப்பாகும். மக்களுக்காக சங்கம் நிறைய நிகழ்வுகளை நடத்தும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + eleven =