காவலர் வீரவணக்க நாள்- தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உள்துறை மந்திரி

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். 
டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். 

இதேபோல் அந்தந்த மாநில காவல்துறை சார்பில் காவலர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைத்தலங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + one =