கால்வாய்கள் குப்பைகள் கொட்டும் இடமா?

0

வீடமைப்புத் திட்டங்களில் கடை வீடுகள் உள்ள பகுதிகளில் வசிப்போர் அலட்சியமாக குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டுவதால் அங்கு நீரோட்டம் தடைப்பட்டு, கால்வாய்கள் அடைப்பட்டுக்கிடப்பதன் மூலம் வரும் தொடர் மழைக்காலங் களில் வெள்ளம் ஏற்படுமானால் அந்தப் பாதிப்பு அப்பகுதி வாழ் குடியருப்பாளர்களுக்கும் நேரலாம். அதனால் வெள்ளப் பிரச்சினை இங்கு தலை தூக்க லாம்.
அதே வேளையில் அடைப் பட்டுக் கிடக்கும் கால்வாய் களின் தூய்மைக் கேடு வட்டார மக்களுக்கு நோய் நொடிகளைக் கொண்டு வரலாம். மேலும் இந்தக் கால்வாய்கள் மனிதர்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் இடமா? என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கேள்வி எழுப்பினார்.
நேற்று (15.9.2020) காலையில், இங்கு தெலுக் பூனுட் சாலையில் அமைந்திருக்கும் கடை வீடமைப்புப் பகுதியில் அடைபட்டுக்கிடக்கும் கால்வாய் களில் சேர்ந்திருக்கும் குப்பை களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த குத்தகைப் பணி யாளர்களிடம் அங்குள்ள நிலவரங்களை நேரில் சென்று கண்டறிந்தப்பின் பத்திரிகை யாளரிடம் அது குறித்த தகவல் களைத் தெரிவித்தார்.
இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந் தும் அவற்றை பொது மக்கள் பயன்படுத்தாமல் அலட்சியமாக குப்பைகளைக் கால்வாய்க்குள் எறிந்து செல்வது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக லாவ் கூறினார். மாநகர் மன்றக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க விருப்பதாக அவர் சொன்னார். அவருடன் மாநகர் மன்ற அதிகாரிகளும் அப்பகுதி நிலவரங்களைப் பார்வையிட்ட னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =