கால்வாய்களில் சட்டவிரோத நீர் தடையை ஏற்படுத்துவோருக்கு எதிராக தக்க நடவடிக்கை

வடிகால் நீர் பாசன இலாகாவிற்கு சொந்தமான கால்வாயில் நீரோட்டத் திற்கு சட்டவிரோதமான முறையில் தடையை ஏற்படுத்திவரும் தரப்பின ருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜாவி சட்டமன்ற உறுப்பினர் இங் மூய் லாய் கூறினார்.
இங்குள்ள சுங்கை ஜாவி கம்போங் பெங்காலான் ஜாலான் ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள கால்வாய் ஒன்றில் பொறுப்பற்ற தரப்பினரால் மணல் மூட்டைகளைக் கொண்டு, தடுப்பு ஏற்படுத்தியதால் மழை நீர் வெளியேற்றம் தடைப்பட்டு இப்பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் சில தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டப் பின்னர் அந்த தடுப்பு அகற்றப்பட்டதாக தெரியவந்தது.
பொறுப்பற்றவர்கள் இச்செயலை ஏன் புரிந்தார்கள் என்பது தெரிய வில்லை.
இருப்பினும் அரசாங்கத்தின் திட்டத்தில் இதுபோன்ற செயலைப் புரிவது சட்டப்படி குற்றமாகும். இதனால் அண்மைய காலமாக பெய்து வரும் கடும் மழையால் இப்பகுதி பெரும் வெள்ள பாதிப்பை எதிர்நோக்கியதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இனிமேலும் இதுபோன்ற அனுமதி
யற்ற செயலைப் புரிவோருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக வடிகால் நீர் பாசன இலாகாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் படுமென இங் மூய் லாய் கடுமையாக எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =