காலை நேரத்தில் நடந்த துயரம்: விபத்தில் தந்தை – மகன்

0

நேற்று இங்கு ஜூரு டோல் சாவடிக்கு அருகில் ஒரு லோரியுடனான விபத்தில் பினாங்கைச் சேர்ந்த ச.அன்பழகன் (வயது 46), அவரது மகன் டினேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அவர்கள், நேற்று காலை 10.30 மணியளவில் வேலைக்குச் செல்லும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்து அறப்பணி வாரியத்தில் பணியாற்றும் ச.அன்பழகன், சிம்பாங் அம்பாட் தாமான் மேராக்கில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வேளையில், ஜூரு கட்டணச் சாவடிக்கு அருகில் உள்ள ஷெல் எண்ணெய் கிடங்கின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை துப்புரவுப் பணிக்கான லோரியில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் மோட்டார் சைக்கிள் மோதி சிதைந்ததில் நிகழ்விடத்திலேயே அவர்கள் பலியானார்கள். மரணமடைந்த அன்பழகன், பினாங்கு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரும் அவரது மகன் தினேஷும் இந்து அறப்பணி வாரியத்துக்கு உட்பட்ட பல குத்தகை வேலைகளை எடுத்துச் செய்பவர்கள்.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் அன்புக்குப் பாத்திரமானவர்கள். பொதுமக்கள் அவர்களின் உடல்களை புக்கிட் மெர்தாஜம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவினர். விபத்து குறித்து காவல்துறை விசாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + four =