காலைச் சந்தை வியாபாரிகள் தூய்மையைப் பேண வேண்டும்

காலைச் சந்தையில் வியாபாரம் செய்வோர், சுகாதார அமைச்சின் அறிவிப்புகளை மதித்து சமூக இடை வெளி, மூகக் கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றைக் கடைப்பிடித்து, இப்பகுதியில் தூய்மையைப் பேணிக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென நேற்று இங்குள்ள, காலைச் சந்தையைச் சுற்றிப் பார்வையிட்ட கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வியாபாரிகளிடம் கூறினார்.
பின்பு, இப்பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த சிலரிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
அவருடன், கெஅடிலான் உறுப்பினர்கள் சிலரும் வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 4 =