காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் சுகாதார இலாகா நடவடிக்கை

இங்கு, நேற்று காலையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கடையின் குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதி யான உணவுப் பொருள்களை கோல லங்காட் சுகாதார இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.
1983ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இக்குற்றத்தைப் புரிந்த அதன் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் சம்மனை வழங்கினர்.
மேலும் தூய்மையற்ற நிலையில் அக்கடையை நடத்தி வரும் அந்நபரை எச்சரித்ததுடன் விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு அவர் அழைக்கப்படுவாரென அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 8 =