காலனித்துவ ஆட்சியின் விமர்சனங்களை கொண்டு மதிப்பீடு செய்யக்கூடாது

ஓர் இனம் மற்றோர் இனத்தைவிட பணக்காரர்கள் என்று கூறப்படும் கருத்திற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்த எம்.பி. ஒருவர் நேற்று (புதன்கிழமை) எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
நாட்டிலுள்ள சமூகங்கள் நிதி நிலைமைகளை அடிப்படையாக வைத்தே மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் இனவாரி யாக அல்ல என்றும் பெருவாஸ் எம்.பி.யான நிகே கோ ஹம் மக்களவையில் தெரிவித்தார்.
சீனர்கள் செல்வந்தர்கள் என்றும் மலாய் மற்றும் இந்தியர் கள் ஏழைகள் என்றும் கருத் துணர்வு நாட்டில் நிலவுவதை அந்த எம்.பி. ஒப்புக் கொண்டார்.
சீனர்களுக்கு மலாய்க்காரர் களே ஆகப்பெரிய பணக்காரர் களாகும்.
ஏனெனில் அவர்கள் நிலங்களுக்கு சொந்தக்காரர் கள், என்பதால் மலாய்க்காரர் களின் பால் சீனர்கள் பொறாமை கொள்ளுதல் கூடாது, என்று நிகே வலியுறுத்தினார்.
சீன இனத்தைச் சேர்ந்த முந்தைய தலைமுறையினர் வறுமையை
அனுபவித்தனர். சாப்பிடுவதற்கு உணவு இல்லாத நிலையில் கூட இருந் தனர்.
அதன் காரணமாக தங்க ளின் பிள்ளைகளை மற்றவர் களுக்கு தத்து கொடுத்தனர் என்று அவர் நினைவுபடுத்தி னார்.
இதற்கிடையே, இதன் தொடர் பாக மற்றொரு எம்.பியான வில்லியம் லியோங் (செலாயாங்) மக்களவையில் கருத்துரைத்தார்.
மலாய்க்காரர்கள் சோம்பேறி கள் மற்றும் சீனர்கள் பேராசைக் காரர்கள் என்று கூறப்படுவது காலனித்துவ ஆட்சியில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் என்று வில்லியம் வலியுறுத்தி னார்.
இந்த மாதிரியான விமர்சனங் களிலிருந்து நாம் வெளிவர வேண்டும். இந்த புதிய யுகத்தில் நாம் இவற்றை மாற்ற வேண்டும்.
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம் கூறுகையில் அனைத்துப்பூர்வ குடியினரும் சோம்பேறிகள் என்று கூறப்படு வது காலனித்துவ ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட விமர் சனங்களாகும் என்று கூறினார்.
அத்தகைய கருத்துகள் மலேசியாவில் தொடர்ந்து நிலை நாட்டப்படுகின்றது. அவ்விவ காரத்தில் நாம் ஆழமான அதிர்ச்சித் தன்மையை வெளிப் படுத்த வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =