கார்டனியா பேக்கரி நிறுவனம் 325 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை அன்பளிப்பாக வழங்கியது

0

மலேசிய நம்பிக்கை பயனீட்டாளர் சங்கம், சா’ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி இணை ஏற்பாட்டில் கார்டனியா பேக்கரி ஆதரவில் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளி உட்பட 12 பள்ளிகளில் பயிலும் 325 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை அன்பளிப்பாக வழங்கி உதவியது.
ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக சென்று புத்தகப் பைகள் வழங்கப்பட்டதோடு கார்டனியா ரக ரொட்டிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகப் பைகளை எடுத்து வழங்கிய பெக்கோ சட்ட மன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநில நம்பிக்கை பயனீட்டாளர் சங்கம்,சா’ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியுடன் இணைந்து கார்டனியா பேக்கரி நிறுவனத்தின் ஆதரவுடன் மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் ரொட்டிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி பாராட்டினர்.
மலேசிய நம்பிக்கை பயனீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ டேவிட் மணியம், சங்கம் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவும் கடப்பாட்டை கொண்டுள்ளதாகவும் இப்பணி தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + twenty =