காரே இல்லாத ஏழைகளுக்கு உதவித்தொகை ஏன்?

0

எண்ணெய் உதவித்தொகையைக் கொடுப்பதை விட பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த அதற்கு உதவித்தொகை வழங்குங்கள் என்று பிரபல பொருளாதார பேராசிரியர் ஜோமோ சுந்தரம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். சாதராண அடித்தட்டு மக்களுக்கு இந்த உதவி என்று கூறப்பட்டுள்ளது. அந்த 20 வொழிக்காட்டு ஏழை மக்களுக்கு கார்களோ மோட்டார் சைக்கிளோ கிடையாது. இவர்கள் எல்லாம் பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அந்த ஏழை மக்களில் 70 விழுக்காட்டு பேர் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் அதற்கு உதவிகளை வழங்குங்கள் என்றார் அவர்.

வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி அரசாங்கம் எண்ணெய் உதவித்தொகையை வழங்குவது பற்றி வெளிவந்துள்ள அறிவிப்பு பற்றி அவர் பேசினார்.

எல்லா நாடுகளிலுமே எண்ணெய் உதவித்தொகை என்பது சாதாரண மக்களை விட நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் பயனாக இருக்கிறது. அது போல நம் நாட்டிலும் கார் வைத்திருப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் ஏழைகளுக்குத்தான் உதவ வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =