காரில் தங்கியிருந்த குடும்பத்திற்கு எக்கோன்சேவ் உதவி

குடும்ப பிரச்சினையால் சஹ்மான் இஸ்மாயில்(29) சுங்கைப்பட்டாணி லகுனான் மெர்போக் எனுமிடத்திலுள்ள ஒரு எண்ணெய்க்கடை வளாகத்தில் தமது காரில் மனைவியுடனும் ஒருவயது மகளுடனும் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த அந்த குடும்பத்திற்கு சுற்று வட்டார மக்கள் உதவி வந்துள்ளதாக எக்கோன் சேவ் பேரங்காடியின் நிர்வாகி எம்.கவிகுமார் கூறினார். தகவல் கிடைத்ததும் தங்கள் குழுவினர் அந்த குடும்பத்தை நேரில் கண்டு விசாரித்து நிலைமையை கேட்டறிந்ததாக கவிகுமார் தெரிவித்தார். குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சஹ்மான் தம்மிடம் கூறியதாக கவிகுமார் கூறினார். உடனே சஹ்மானுக்கு உதவ முடிவெடுத்து தற்போது சுங்கைப்பட்டாணி தாமான்ரியா வீடமைப்புப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வீட்டில் தற்காலிகமாக தங்கியுள்ள நிலையில் ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை வழங்கியதாக கவிகுமார் கூறினார். நிர்வாகத் துறையில் படித்துள்ளதால் சஹ்மானை தங்களது பேரங்காடியில் வேலைக்கு சேர்த்துக் கொண்டதாக அவர் சொன்னார். எக்கோன் சேவ் பேரங்காடி நிறுவனம் எந்த இனம் என்ற பாரபட்ச மின்றி மக்களுக்கு உதவி வருவதாக அவர் கூறினார், இந்த நிகழ்ச்சியில் எக்கோன் சேவ் பேரங்காடியின் வட மண்டல பொது நிர்வாகி சம்சுரி மன்சோரும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =