காரிலிருந்து வெ.5 லட்சம் பறிமுதல்; மூன்று பெண்கள் கைது

0

தாய்லாந்திலிருந்து பணத்தை கடத்திக் கொண்டு மலேசியாவிற்குள் நுழைய முயன்ற காரொன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள்,அக்காரிலிருந்து வெ.5 லட்சம் ரொக்கப் பணத்தை கைப்பற்றியதோடு 3 பெண்களையும் கைது செய்தனர்.
கடந்த திங்கட்கிழமை பெங்காலான் உலு,புக்கிட் பெராபிட் சுங்கச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,அக்காரின் முன் இருக்கைப் பகுதியிலும்,பின்புற டிக்கியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த உடைகளும்,உணவுப் பொருட்களும் கொண்ட மூன்று பைகளிலிருந்து இப்பணத்தை கைப்பற்றியதாக பேரா மாநில சுங்கத்துறை இயக்குநர் டாக்டர் முகமட் சப்ரின் தெரிவித்தார்.
தாய்லாந்து மற்றும் மலேசிய நோட்டுகளும் அதில் இருந்ததாகக் கூறிய அவர்,அறிவிக்கப்படாமல் கொண்டு வந்த பணங்கள் இவை என்றார்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு தாய்லாந்து பெண்களும், கெடா சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த ஓர் உள்நாட்டு பெண்ணும் அடங்குவர். மேல் விசாரணைக்காக அவர்கள் பயன்படுத்திய தாய்லாந்து எண் பட்டை கொண்ட ஹோண்டா ரகக் காரும்,40 வயதிலிருந்து 51 வயதுக்குட்பட்ட அம்மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =