காராக் நெடுஞ்சாலை விபத்தில் தாய்லாந்துப் பெண்கள் மூவர் பலி

நேற்று முன்தினம் அதிகாலையில் கோலாலம்பூரில் இருந்து காராக் நோக்கிச் செல்லும் கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் பலியாகிய வேளையில், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகினர்.

4 சக்கர இயக்க வாகனமும் வெட்டிய ரப்பர் மரங்களை ஏற்றி வந்த லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பெந்தோங் மாவட்ட காவல்படைத் தலைவர் யூசோப் உனிஸ் கூறினார்.

மரணமடைந்த யாவியா (வயது 53), மாஸ்கா (வயது 49), ஜந்தானா (வயது 43) ஆகியோர் தென் தாய்லாந்து நராதிபா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்தில் மரங்களை ஏற்றிவந்த கிளந்தானைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய லோரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் பலத்த காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − two =