காராக் இந்து மயானத்தை பராமரிக்கத் தவறி விட்டோமா? அப்பட்டமான பொய்

0

சில பொறுப்பற்ற தரப்பினர் காராக் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் தேவையற்ற புகார்களை செய்து வருவதாக அவ்வாலயத்தின் செயலாளர் டாக்டர் ஜெயேந்திரன் ஜெயராமன் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆலயத்தின் பராமரிப்பில் காராக் இந்து மயானமும் இருந்து வந்தது.
நாங்கள் பொறுப்பேற்ற அடுத்த சில மாதங்களில் அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதி வாக்கில் நாலரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மயானத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டோம்.
அது குறித்த அனைத்து ரசீதுகளும் தம்மிடம் உள்ளதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட கடும் மழையால் மயானத்தில் புற்கள் காடு மண்டத் தொடங்கின.
இவ்வாண்டு தொடங்கப்பட்டதும் அங்கு மீண்டும் துப்புரவுப் பணிகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டது.
சுமார் 80 விழுக்காட்டுப் பணிகள் நிறைவு பெற்று விட்டன.
மிக விரைவில் அதற்கான அனைத்துப் பணிகளையும் நாங்கள் செவ்வனே செய்து முடிக்கவுள்ளோம். இந்த நிலையில் ஆலய நிர்வாகம் மயானத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டது. மயானம் முழுவதும் காடு மண்டி கேட்பாரற்றுக் கிடப்பதாக சில தரப்பினர் புரளி கிளப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எதற்காக ஆலய நிர்வாகத்தை இவர்கள் இழுத்து விட்டார்கள் என்பது எங்களுக்கு புதிராக உள்ளது.
இது தொடர்பில் கேள்வி இருந்திருந்தால் அவர்கள் நேரடியாக எங்களிடம் வந்து பேசியிருக்கலாம். சம்பந்தப் பட்டவர்களுக்கு முறையான விளக்கம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் எதற்காக இந்த வீண் வதந்தி என்று டாக்டர் ஜெயேந்திரன் கேள்வி எழுப்பினார்.
எங்கள் நிர்வாகத்தில் மொத்தம் 25 பேர் உள்ளனர். அனைவரும் தங்களின் கடமையை முறையாக ஆற்றி வருகின்றனர். இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை யாரும் குழப்ப வேண்டாம். சம்பந்தப்பட்ட அந்த தரப்பினர் மீது நாங்கள் போலீஸில் புகார் செய்துள்ளோம்.
இது தொடர்பில் பொதுமக்களுக்கும் விளக்கம் அளிக்க தயாராகவுள்ளோம் என்றார் அவர். தங்களை 016- 3229294 அல்லது 012-9625992 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − one =