காரசாரமான சிக்கன் மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:சிக்கன்  – 1/2 கிலோ மிளகு – 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்தனியா தூள் – 1 ஸ்பூன்மிளகாய் தூள் – 1 ஸ்பூன்வெங்காயம் – 1வெண்ணெய் – 100 கிராம்கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறை:முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.சிக்கனை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.சிக்கன் கொதித்துகொண்டிருக்கும் போது அதில் கலந்துவைத்துள்ள மசாலாவையும், உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அதில் கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.கடைசியாக சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.சூப்பரான சிக்கன் மிளகு குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =