காபூல் மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என  உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:-

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (1500 ஜிஎம்டி) இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் முல்லா முகமது அயாஸ் நியாஸி ஒருவர் ஆவார். தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறி உள்ளார்.

இந்த மசூதி பல சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகங்களின் அலுவலகங்களுக்கு அருகில் ஒரு உயர் பாதுகாப்பு  பகுதியில் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − one =