காதலருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் புகைப்படம்

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸின் சலார் படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவரும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி இணையத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவல் கசிந்து வருகிறது. நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன் ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இதுதான் ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஸ்ருதிஹாசன் கூறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 20 =