காதலனால் இளம் பெண் கொலை செய்யப்பட்டார்

0

செந்தூல், கம்போங் பாடாங் பாலாங் குடியிருப்பு பகுதியின் வீடொன்றில் இளம் பெண் கொலையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நேற்று மாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சந்தேகிக்கும் வகையில் அந்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்த பெண்மணி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மாலை 5.52 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு வந்து பார்த்த போது 24 வயது இளம் பெண், வயிற்றில் கத்தி குத்துக்கு உள்ளாகி படுக்கையின் மேல்  இறந்த கிடந்ததாக வங்சா மாஜு மாவட்ட காவல் அதிகாரி ரஜாப் அஹாட் இஸ்மாயில் (Rajab Ahad Ismail) தெரிவித்தார்.

அதே சமயம், அப்பெண்ணின் காதலன் என நம்பப்படும் 43 வயது ஆடவன்  இரத்த வாந்தி எடுத்து மூச்சுத் திணறி கொண்டிருந்த நிலையில் காணப்பட்டான். அந்த ஆடவனை  பரிசோதித்த போது தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஒருவகை திரவத்தை அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக அந்த ஆடவனை  கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பெண்ணின் சடலம் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.

மேலும், அந்த இளம் பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக  ரஜாப் தெரிவித்தார். இருப்பினும் இந்தக் கொலைக்கான நோக்கத்தை கண்டறிய செக்‌ஷன் 302 கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here