காணொளி வழி பத்திரிகையாளர் சந்திப்பை அமைச்சர்கள் நடத்த வேண்டும்

0

ஊடகத்துறை பணியாளர் கள் பாதுகாப்பாக தங்களின் வீடுகளிலிருந்து பணிகளைச் செய்வதற்கு தோதாக அமைச்சர்கள் விர்சுவல் எனப் படும் காணொளி மூலமாக பத்திரிகையாளர் மாநாட்டை நடத்த முன்வரவேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார்.
இந்த முறையில் கோவிட் -19 கொள்ளை நோய் பற்றிய நேரடித் தகவல்களைச் சேகரித்து பொது மக்களுக்கு வழங்கும் முன்னணி பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய முடியும் என்று முன்னாள் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரான வான் அஸிஸா நேற்று விடுத்த அறிக்கையில் கூறினார்.
பி.கே.ஆர். கட்சியின் ஆலோசனை மன்றத்தின் தலைவராக பணியாற்றும் வான் அஸிஸா, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்றார். ஏனெனில் தற்போது நாட்டில் சுவாசக் கவசங்கள் மற்றும் கையுறை களின் பற்றாக்குறை அதிக மாக இருக்கிறது.
அமைச்சர்கள் தங்களின் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நிகழ்வை பதிவு செய்து செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பலாம். இதன் வழி செய்தியாளர்கள் தங்களின் செய்திகளை தயாரிக்க முடியும்.
காணொளி பத்திரிகையாளர் சந்திப்புகளில் பத்திரிகையாளர்கள் தங்களின் கேள்விகளை ஆன் லைன் மூலமாக கேட்க முடியும். காணொளி வழி பத்திரிகையாளர் சந்திப்புகளை நாம் பல காரியங்களுக்கு பலவிதத்தில் பயன் படுத்தக் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன.
தங்களின் அமைச்சுகளின் இணைய தளங்களில் அமைச்சர்கள் தங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யலாம் என்று வான் அஸிஸா கூறினார். இதைத் தவிர்த்து மீடியா அறிக்கைகளை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பத்திரிகையாளர்கள் நெடுந் தூரம் பயணம் செய்ய வேண் டிய அவசியம் இருக்காது.
இதன் வழி கோவிட்-19 தாக்குதலுக்கு பத்திரிகை யாளர்கள் ஆளாவதை குறைக்க முடியும் என்று வான் அஸிஸா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − two =