இந்திரா காந்தியின் மறைந்து வாழும் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா இரு கார்களை வாங்கியதைப் போலீசார் தடுக்காததற்கு நீதிமன்ற உத்தரவு இல்லாததே காரணம் என உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார். ஜசெகவின் கஸ்தூரி பட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஹம்ஸா ஸைனுடின், ரிடுவான் அப்துல்லா இது வரை எந்தவிதமான போக்குவரத்துக் குற்றத்தையும் செய்ததாகப் புகார் இல்லையென்றார்.
நீதிமன்றம் வெளியிடும் உத்தரவுக்கு இணங்கவே சாலைப் போக்குவரத்து இலாகா ஒருவரைக் கைது செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். காணாமல் போயிருக்கும் ரிடுவான் அப்துல்லாவை போலீசார் இன்னமும் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாகி இருக்கும் ரிடுவான் அப்துல்லா இரு கார் களை வாங்கி, தனது பெயரில் பதிவு செய்திருக்கும்போது, நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவுக்கிணங்க அவரைக் கைது செய்யாமலிருப்பது ஏன் என்று கஸ்தூரி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற ஆணையர் பூபிண்டர் சிங், ரிடுவான் அப்துல்லா கார்களை தமது பெயரில் பதிவு செய்ததை சட்டத் துறை அலுவலகம் புலன் விசாரணை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மறுமொழி கூறியிருந்த அரசின் மூத்த வழக்கறிஞர் நுர் இடாயு அமிர், வாகனப் பதிவானது இணையதளத்தின் வழி மேற்கொள்ளப் படுவதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறும்போது, ரிடுவான் அப்துல்லா, அவரது இரண்டாவது மனைவி, அவர்களின் பிள்ளைகளையும் போலீசார் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
2010 ஆண்டு இந்திராவின் இளைய மகள் மகள் பிரசன்னா டிக்ஷாவை கடத்திச் சென்று, இன்னமும் தாயாரிடம் ஒப்படைக்காமல் இருக்கும் ரிடுவானை கைது செய்ய வேண்டுமென்று 2016இல் கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2020ஆம் ஆண்டு, தமது மகளைத் தேடிக் கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைப்பதில் மெத்தனம் காட்டும் போலீசாரின் மீது இந்திரா வழக்கைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.