காடேக் மக்கள் சேவை மையம் மக்களுக்கு நன்கொடையாக சோளம் வழங்கியது

காடேக் சட்டமன்ற தொகுதியில்உள்ள காடேக் மக்கள் சேவை மையம் ஏற்பாட்டில் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோளத்தை நன்கொடையாக வழங்கிய லோ சீ லியோங்கிற்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறினார். மேலும் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் வீடு வீடாக சென்று சோளத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உதவிய ரோஸ்லான் லான் கெலுலட், ஆடி மடி, சைடா டீடா மற்றும் நடியா ஆகியோருக்கு சாமிநாதன் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். சமூக தன்னார்வலர்கள், சமூக இயக்கங்கள் அல்லது தனிநபர் ரொக்கம் அல்லது உணவுப் பொருட்கள், காய்கறிகள், முகக் கவரிகள், கிருமிநாசினிகள் இன்னும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்க விரும்பினால் காடேக் மக்கள் சேவை மையத்தை 017-2843031என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது 555050124131 மேபேங்க் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம் என்று சாமிநாதன் கூறினார். மேலும் இவ்வேளையில் அவர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தன்னுடன் உறுதுணையாக நின்று தனக்கு என்றும் உதவி அளித்து வரும் நல்லுள்ளங்களுக்கு தனது நன்றியை சாமிநாதன் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =