காசிக்கு சென்ற பலனை தரும் கடல் தீர்த்தம்

0

திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலய தீர்த்தங்களில் ஒன்றாக கடல் தீர்த்தும் உள்ளது. அது போல குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலய தீர்த்தமாக கடல் உள்ளது.

கடல் தீர்த்தம் மிகவும் சிறந்த பலனை அளிக்கும் அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதால் கடலை மகா தீர்த்தம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கடலைத் தீர்த்தமாகக் கொண்டு குலசை விளங்குகிறது. அதிலும் புண்ணிய நதியான கங்கை நதி கலப்பதால் வங்கக் கடலை கங்கைக் கடல் என்று அழைப்பார்கள்.

கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டால் பாவம் போய் விடும். இதனால் புண்ணியம் பெற பக்த கோடிகள் பலரும் அங்கு சென்று வருகின்றனர். அப்படி அங்கு செல்ல முடியாதவர்கள் குலசேகரன்பட்டினம் வந்து, வங்கக் கடலில் நீராடி, முத்தாரம்மனையும், ஞானமூர்த்தீஸ்வரரையும் மனமுருகி வழிபட்டால், காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here