காங்கோவில் மலேசிய அமைதிப்படை பாதுகாப்புடன் உள்ளது

0

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் படையில் இடம்பெற்றுள்ள மலேசிய அமைதிகாக்கும் குழுவினர் பாதுகாப்புடன் உள்ளனர். தற்போது
அந்நாட்டின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் மலேசிய ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள மலேசிய ராணுவ வீரர்களின் நிலைமையை பாதிக்கவில்லை என கூறப்பட்டது. காங்கோ பாதுகாப்பு நிலைமை குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம் என ஆயுதப்படைக்கு நெருக்கமான தகவல்கள் கூறின. கடந்த அக்டோபர் மாதத்தி லிருந்து காங்கோ ஜனநாயக சம்மேளன கிளர்ச்சி தரப்புக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் கல வரத்தில் இதுவரை பொதுமக்களில் 100 பேர் மாண்டனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பெனி வட்டாரத்தில் அமைதியைக் காப்பதில் அமைதிப் படையும் அரசாங்கப் படையும் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காங்கோவில் ஐநா அமைதி காக்கும் படையில் இடம்பெற்றுள்ள 49 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.அங்கு உள்ள ஐநா அமைதி காக்கும் படையில் 16,500
ராணுவ வீரர்களும் கண் காணிப் பாளர்களும் உள்ளனர். இது தவிர
1,300 போலீஸ் காரர்கள் மற்றும் பொதுமக்களில் 4,000 கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 20 =